தேவபுரம் அரிசி ஆலை மீள இயக்கப்படும் ,பொருத்து வீடுகளுக்கான தொழிற்சாலை மட்டக்களப்பில் –ஸ்ரீநேசன் எம்.பி

பட்டிப்பளை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று (02.05.2018) நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞா.ஸ்ரீநேசன் ,சா.வியாலேந்திரன் ,சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் சகல திணைக்கள தலைவர்கள் ,உத்தியோகத்தர்கள் உள்ளூராச்சி சபை பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரோடு பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் எதிர்நோக்கப்படும் பிரச்சனைகள் தொடர்பாக அப்போது ஆராயப்பட்டது .

இதன் போது கைவிடப் பட்ட நிலையிலுள்ள தேவபுரம் அரிசிஆலை மீள புனரமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பாடுள்ளதாகவும் புனர்வாழ்வு,புனரமைப்பு,மீள்குடியேற்ற அமைச்சின் அனுசரணையில் அமைக்கப்படவிருக்கும் சீமேந்து பொருத்து வீடுகளுக்கான சீமேந்து பலகைகள் (cement blocks) உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மட்டக்களப்பு  மாவட்டத்தில் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப் படுவதாகவும் தெரிவித்தார்.இவற்றால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர் ,யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தேவபுரம் ,முறக்கெட்டான்சேனையில் சிறப்பாக இயங்கி பலருக்கு வேலைவாய்ப்புக்களை  வழங்கி கிழக்கின் பொருளாதரத்தில் பெரும் பங்கு வகித்த ‘தேவபுரம்  அரிசிஆலை  ‘ கடந்த யுத்த காலத்தில் சேதமடைந்து இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.இதன் இயந்திரங்கள் யாவும் சூறையாடப் பட்டு தற்போது பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.

இதனை புனரமைத்து செயற்படுத்த பலரும் முயன்ற போதிலும் அது நிறைவேறவில்லை.எனினினும் நான் பல அமைச்சுகளோடும்  தொடர்ந்து தொடர்பு கொண்டு எடுத்த  முயற்சியினால் இதனை புனரமைத்து இயங்க வைப்பதற்கான சந்தர்ப்பம் கைகூடியுள்ளது.மிக விரைவில் இந்த ஆலை , அரிசி ஆலையாக மட்டுமல்லாது அரிசியில்  அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் பிற பொருட்களையும் உற்பத்தி செய்யும் நிலையமாக நமது மக்களுக்கு வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கி தனது உற்பத்தியினை தொடங்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்