சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல். கல்முனையில் கருத்தரங்கு

சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் உபகுழுவின் ஏற்பாட்டில் முரண்பாடுகளற்ற சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் சமாதானக் கருத்தரங்கு இன்று 02 ஆம் திகதி கல்முனை வலய கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கானது யூஎஸ் எயிட் மற்றும் சொண்ட் அரசசார்பற்ற நிறுவனத்தின் அனுசரணையில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் உப குழுவில் ஏற்பாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் மாணவர் பங்கு எனும் தொனிப்பொருளில் சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூசனம் ஏ.எல்.எம் சலீம் தலைமையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கின் போது யூஎஸ் எய்ட் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் டினேஸா சொண்ட் அரசசார்பற்ற நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.செந்தூர்ராஜன் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் அப்துல் ஜலீல் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பயிற்றுவிப்பாளர்கள் கல்முனை கல்வி வலயத்திற்குட்புட்ட பாடசாலை மாவண மாணவிகள் அடங்களாக நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட குறிப்பிடத்தக்கது.