திருமலை நகரசபை தொழிலாளர்களின் குறைகள் தீர்க்கப்படும்.நகரசபைத்தலைவர் ந.இராஜநாயகம்

பொன்ஆனந்தம்

உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் முறையாக பேணப்படவில்லை. கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஊழியர்களின் சங்கத்தின் தலைவர் குறிப்படுவதில் உண்மைகள் உள்ளன. அதனை நான் கருத்தில்கொண்டு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றேன்

என திருகோணமலை நகரசபைத்தலைவர் ந.இராஜநாயகம் தெரிவித்தார் திருகோணமலை நகர சபையில் நடந்த மேதினக்கூட்டத்தில் மேற்படி கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஊழியர்களின் சங்கத்தின் தலைவர் எஸ்.கண்ணின் உரைக்குப்திலளித்துபேசுகையிலே மேற்படி கருத்தை அவர் முன்வைத்தார் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

உள்ளுராட்சி மன்றத்தில் பணியாற்றும் நகர சுத்தி தொழிலாளர்கள் 12 மணித்தியாலங்கள் பணியாற்றினார்கள். விடுமுறை நாட்களிலும் பணியாற்றினார்கள் அதற்காக மேலதிக கொடுப்பவுகள் எதுவும் வழங்கப்பட வில்லை.விடுமுறை நாட்களுக்காக இரட்டிப்பு கொடுப்பனவுகளும் வழங்கப்பட வில்லை.

நகரசபையைப்பொறுத்தவரை சுகாதாரப்பகுதி ஊழியர்களும் இந்த நகரசுத்தி தொழிலாளர்களும் இல்லாவிட்டால் இந்த நகரசபையை நாம் நடாத்தமுடியாது.

எனவே சந்கத்தின் தலைவர் குறிப்பட்ட பல குறைபாடுகளும் உண்மையானவை அவற்றில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. அதனை நான் ஆராய்ந்துள்ளேன். அவர்களுடனும் கலந்துரையாடியும் உள்ளேன். அவர்கள் கடமையுணர்வுடன் வேலை செய்கிறார்கள் 12 மணித்தியாலங்கள் பணியாற்றுகின்றார்கள் ஆனால் அவர்களுக்கு எட்டுமணித்தியாலத்திற்குரிய கொடுப்பனவு தான் வழங்கப்படுகின்றது.

பொது விடுமுறைதினத்தில் பணியாற்றினால் வழங்கப்படும் இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படுவதில்லை

இந்தக்குறைகளை நான் சென்ற வாரம் பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகத்திற்கச்சென்று கலந்துரையாடியுள்ளேன் அவர்களது அனுமதியைப்பெற்று அவர்களது முறையான கொடுப்பனவை வழங்க நான் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றேன்.

இவ்வாறே அவர்களது வாழ்விடத்தை நான் பார்வையிட்டுள்ளேன்.உண்மையிலே இந்த நகரத்தைச்சுத்தம் செய்கின்ற ஒரு தொழிலாளியின் வாழ்விடம் எவ்வாறு  சுத்தமில்லாதஇடத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பதனைப்பார்க்கும் போது மிகவும் மனவேதனையாக வுள்ளன.கிட்டத்தட்ட 167 தொழிலாளர்கள் எமது சபையில் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு எல்லாம் வீடுகட்டிக்கொடுப்பதற்கான காணி அங்கு இல்லை. இருந்தவை மாற்றப்பட்டு விட்டன. இருக்கின்ற காணிக்குள் வீட்டுத்திட்டம் அமைத்துக்கொடுப்பதானால், மாடி வீட்டு வசதியே ஏற்படுத்தமுடியும் அவ்வாறான திட்டத்திற்கான நிதியை தேடிப்பெற்று அதனை அமைப்பதற்கானமுயற்சியையும் நாம் மேற்கொண்டுள்ளோம் தற்போதே வரைபடம் வரையும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவை கைகூடுமானால் அவர்களது நீண்டகால சுமையான வாழ்விற்கு சுமூகமான வழிபிறக்கும் மற்றும் அவர்களது தொழில்பாதுகாப்பு சார்ந்த விடயங்களும் உள்ளன. சிலர் 6 மாதகாலம் வேலை செய்கிறார்கள் அவை மீள புதுப்பிக்கப்படுகின்றன. அது வும் அவர்களுக்காக தொழில் பாதுகாப்பை வழங்காத நிலமைகளும் காணப்படுகின்றன. இதுபொன்ற குறைபாடுகளை நிவர்த்திக்க நாம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.