படுவான் முத்தமிழ்முரசு இறுதிநாள் நிகழ்வு.

கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா கலைக்கலா மன்றத்தின் படுவான் முத்தமிழ் முரசு நிகழ்வுகள் கடந்த 28,29,30 ஆகிய தினங்களில் கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்;ணமிசன் வித்தியாலயத்திலும், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலிலும் நடைபெற்றன.

ஈஸ்வரா கலைக்கழகத்தின் ஆண்டு நிறையொட்டி நடாத்தப்பட்ட நிகழ்வில் சனிக்கிழமை இரத்தானமும், ஞாயிற்றுக்கிழமை மாணவர்களின் கலைநிகழ்வும், திங்கட்கிழமை கலைகலாமன்றத்தின் கூத்து, நாடகம், கவியரங்கு போன்றநிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டன.

கலைக்கழகத்தின் தலைவர் பி.நீதிதேவன் தலைமையில் மூன்று நாட்களாக நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், பிரதேசசபை தவிசாளர் சி.புஸ்பலிங்கம், வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் மற்றும் அதிகாரிகளும், அமைப்புக்களின் பிரதிநிதிகளும்; கலந்துகொண்டிருந்தனர்.