ஈழத்தமிழினத்தின் விடிவுப்பகலவன் இன்னும் உதிக்கவில்லை


நாங்கள் பிரிவினை கோரவில்லை பிராந்திய உரிமையையே கோருகின்றோம். இது வடக்கு கிழக்கை வாழ்விக்க அல்ல தெற்கு மேற்குக்கெல்லாம் தெளிவான அதிகாரம் வழங்கிடத்தான். என முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்

மட்டக்களப்பு அம்பாறை மாட்டங்களை ஒருங்கிணைத்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டம் நேற்று வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தில் பிரதேச சபை தவிசாளர் யோ.ரஜனி அவர்களின் தலைமை நடைபெற்றது இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

ஓன்று கூடிய அரசு திருநாள் இது அமேரிக்கா சிக்காகோ நகரிலே தான் அந்த அதிசயம் நடந்தது மாடாய் உழைத்த தொழிலாளிகளை மனிதனாய் அங்கிகரித்த நன்நாள் இது எட்டுமணித்தியால வேலை தொழில்சார்பாதகாப்பு மேலதிக வேலைக்கான கொடுப்பனவு காப்புறுதி என்பனவெல்லாம் உறுதிப்படுத்துப்பட்டதோடு இன்றைய நாள் விடுமுறை நாளாகவும் விளம்பப்பட்டது.

இலங்கையிலே இதற்கொரு விதிவிலக்கை அறிவித்துள்ளது. பௌத்த மக்களின் வெசாக் புனிதவாரம் என்பதனால் இது தொடர்பான வேண்டுகோளை நாம் புறக்கணிக்கவில்லை அதற்காகத்தான் பௌத்த வழிபபாட்டு மையங்களுக்கு அப்பாற் சென்று இக் கூட்டத்தினை நாங்கள் நடத்துகின்றோம்.
தொழிலாளர்கள் விடுதலை பெற்றனர் அதனால் ஆடினார்கள் பள்ளுப்பாடினார்கள் ஆனால் ஈழத் தமிழினத்தின் விடிவுப்பகலவன் இன்னும் உதிக்கவில்லை. அவ்வப்போது விடிவெள்ளிகள் தோன்றின. ஆனால் இன்னும் விடியவில்லை அத்தகையதோர் விடிவெள்ளிதான் 2015 ஜனவரி எட்டிலே தோன்றியது. இன்றுவரை மலர்ந்தும் மலராத பாதி மலராயும் விடிந்தும் விடியாத பொழுதாய்தான் நிலமை இருக்கின்றது.

பிரிக்கப்படாத, பிரிக்கப்பட முடியாத, ஒரோநாட்டுக்குள் பிராந்திய ஆளுகையை அங்கிகரிக்கும் கூட்டாட்சியாம் சமஸ்ரியாம் எமது கோரிக்கை இது தமிழருக்குரிய வரப்பிரசாதமல்ல நாட்டுக்கான நடப்பியல் கொள்கை பொருளாதாரபுரிப்பிற்கான சிறந்த மார்க்கம் இது பல சிங்கள தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்தகோட்பாடாகும்.
துவேசிகளினால் எதிர்க்கப்படுகின்றது என்பதனால் அதனை தூக்கிப்போட்டுவிட்டு நாட்டை குட்சிக்குவராக்க முடியாது. நல்லாட்சியின் நிறுவுனர் சோபித தேரருக்கு நாட்டின் இருபெரும் தலைவர்களும் செய்யும் நன்றிகடனும் பேரஞ்சலியும் புதிய அரசியலமைப்பை ஆக்கி நடைமுறைக்கு இட்டுச்செல்வதாய்தான் இருக்கும்.

குட்டு எதிரக்கட்சி இதனைக் குழப்பக்கூடாது. மஹிந்த ராஜபங்ச அமைத்த நிபுணர் குழுவும் கூட்டாட்சியைத்தானே அறிக்கையிட்டது. ஆட்சியினைப்பிடிப்பதற்காக நாட்டிற்கு தீயிட்டுவிட்டு குளிர்காய நினைப்பதில் என்ன நியாயம் இருக்கினறது.

ஆட்சியை வீழ்த்தக் கைகொடுக்கவில்லை என்பதனால் தானே எதிர்க்கட்சி தலைவர் மீது கோபம். பிரதமராக நினைப்பவரல்ல எமது தலைவர். நாட்டின் பிணையை நீக்க செயற்படுபவர். ஏதிர்காலத்தில் கூட எமக்கு எதிர்க்கட்சி தலைமை வேண்டாம். நாங்கள் பிரிவினை கோரவில்லை பிராந்திய உரிமை கோருகின்றோம். இது வடக்கு கிழக்கை வாழ்விக்க அல்ல தெற்கு மேற்குக்கெல்லாம் தெளிவான அதிகாரம் வழங்கிடத்தான்.
கூட்டு எதிர்கட்சி அன்பர்களை கூவி அழைத்துக் கூறுகின்றோம். இன்னும் இருக்கும் இருபது மாதங்களுக்குள்ளே புதிய அரசியலமைப்பை முழுமைப்படுத்த ஒத்துழையுங்கள். இலங்கை மாதாவின் இனிய குழந்தைகாளாய் நாமெல்லாம் இருப்போம். என்ற எமது தேசிய கீதவரிகளுக்கு உயிரகொடுக்க உதவுங்கள். ஜனாதிபதி அவர்களுக்கு ஓர் வேண்டுககோள் உங்களை தக்கவைத்த கரங்களுக்கு ஒரு தக்க உபகாரம் செய் உழைத்திடுங்கள். மகாநாயக்க பெரியோர்களுக்கு ஒரு வேண்டுகோள் வெண்ணை திரண்டுவரும் போது தாழியை முற்படுவோரை விலகிச் சென்றிட பணித்திடுங்கள்.
அன்பான தமிழ் முஸ்லிம் உறவகளே எம்மோடு எதிர் அரசியல் செய்யும் அன்பர்களே,பெரும் தேசியக் கட்சியின்பால் ஈர்ப்புக்கொண்ட அன்பர்களே நாம் பெரியவர்கள் கற்றுத்தந்த பாடத்தை மனங்கொள்வொம்

எண்ணிக்கையில் சிறுபான்மையினரான நாம் முதலில் எமது பிராந்திய உரிமையை வென்றெடுப்போம். அதற்காக கொள்கை அடிப்படையில் ஒருமித்து குரல்கொடுப்போம். உறுதி இல்லாத காணிபோன்றது தான் அபிவிருத்தி. எனவே உறுதி என்னும் அரசியலமைப்பை வென்றெடுக்க ஓரணியில் நிற்போம் பாகப் பிரிவினையை நமக்குள்ளையே செய்திடலாம். ஏன தெரிவித்தார்……பழுகாமம் நிருபர்