மேன்கமம் உதயசூரியன் சம்பியனானது

 

மூதூர் பிரதேச செயலாளர்பிரிவின் சந்தோசபுரம் ஒலி ஒளி விளையாட்டுக் கழகம் தனது 28 ம் ஆண்டு நிறைறையொட்டியும். சித்திரைப் புத்தாண்தாண்டினை முன்னிட்டும் நடாத்திய 04 பேர் கொண்ட கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மேன்கமம் உதயசூரியன் விளையாட்டுக் கழகம் 01ம் இடத்தினைப் பெற்று சம்பியனானது.

இந்நிகழ்வானது கழகத்தின் தலைவர் .ந.வரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், ஆரம்ப நிகழ்வுகள் மற்றும் பரிசளிப்பு வைபவங்கள் பிரதம விருந்துனர்களான முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் .கு.நாகேஸ்வரன், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்..து.ஜெகன், அகம் நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளர்.க.லவகுசராசா, கொட்டியாபுரப்பற்று இந்து சமய அபிவிருத்தி ஒன்றிய உறுப்பினர் மற்றும்; ஏனைய மூத்த சங்க உறுப்பினர்களின் ஊடாக நிகழ்த்தப்பட்டன.

இந் 04 பேர் கொண்ட கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களின் 64 அணயினர் கலந்து கொண்டனர்.

இவ்விளையாட்டுப் போட்டியில் 01ம் இடத்தினை மேன்கமம் உதய சூரியன் விளையாட்டுக் கழகமும், ஈச்சிலம்பற்று சிங்கா விளையாட்டுக் கழகம் 02ம் இடத்தினை பெற்றுக் கொண்டதுடன், 03ம் இடத்தினை சந்தோசபுரம் ஒலிஒளி விளையாட்டுக் கழகம் தட்டிக் கொண்டது. பள்ளிக்குடியிருப்பு புதுமலர் விளையாட்டுக் கழகம் 04ம இடத்தினை பெற்றுக் கொண்டது.

வெற்றியீட்டிய கழகங்களுக்கு பெறுமதி மிக்க கேடயங்களும் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டது.