பாம்புப் புற்றிலிருந்து சுயமாக முளைத்த சிவலிங்கத்திற்கு பூ சொரிவதற்கு  மக்கள் முண்டியடிப்பு!

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற  நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்க்ள் புடைசூழ சித்ராபௌர்ணமி சிறப்புப்பூஜை சிறப்பாக நடைபெற்றது.

 
அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும்  பக்தர்கள் அங்கு அலைமோதினர்.
 
அங்கு சித்ராபெர்ணமி பூஜைக்கு முன்பதாக பாம்புப் புற்றிலிருந்து சுயமாக முளைத்த சிவலிங்கத்திற்கு பூ சொரியும் நிகழ்வு நடைபெற்றது. அதற்கு வழமைபோல பக்தர்கள் முண்டியடித்ததைக் காணமுடிந்தது.
 
ஆலய தலைவர் கோ.கமலநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்விசேட சிறப்பு நிகழ்வில் அம்மனுக்கு  பல நூறு மக்கள் அமுது படைத்தனர். பலர் பொங்கலிட்டனர். இன்னும் பலர் சித்திரைக்கஞ்சி காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கினர்.முடிவில் அன்னதானம் இடம்பெற்றது.
 
நிகழ்வில் பல்வேறு முக்கிய தமிழ்அரசியல்  பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். தமிழர்விடுதலைக்கூட்டணித்தலைவர் இ.ஆனந்தசங்கரி கல்முனை மாநகர பிரதி மேயர் காத்தமுத்துகணேஸ்  காரைதீவுப்பிரதேசசபைபயின் தவிசாளர் கி.ஜெயசிறில் சம்மாந்துறைப்பிரதேசசபையின் பிரதி தவிசாளர் வி.ஜெயச்சந்திரன் காரைதீவுப்பிரதேசசபை உறுப்பினர்களான பி.மோகனதாஸ் மு.காண்டீபன் சி.ஜெயராணி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
 
அம்மனின் பூஜைவேளையில் ஒரு பக்தை பக்திமேலீட்டால் மயங்கிவீழ்ந்தார். அவரை ஆலயத்தலைவர் கமலநாதன் மந்திரம் உச்சரித்து பழையநிலைக்கு மீட்டதையும்காணமுடிந்தது.
 
 
இதேவேளை இந்துக்களின் சித்ரா பௌர்ணமி பண்டிகையை யொட்டி அம்பாறை மாவட்ட ஆலயங்களில் சிறப்புப்பூஜைகள் நடைபெற்று சித்திரகுப்தனாரின் சரிதம் பாடப்பட்டு சித்திரைக்கஞ்சியும் வழ்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.