சம்பந்தன் ஐயா! எல்லாவற்றிற்குள்ளும் ஒழிந்திருந்த இனத்துவேசத்தை நீங்களும் கொப்பளித்துவிட்டீர்கள்…….?

சம்பந்தன் ஐயா!
அபாயா விடயத்தில்
எல்லாவற்றிற்குள்ளும் ஒழிந்திருந்த இனத்துவேசத்தை நீங்களும் கொப்பளித்துவிட்டீர்கள்…….?

எங்கள் சமூகத்தை சேர்ந்த பல ஒட்டுண்ணிகள் அதிகாரத்திற்காக உங்கள் வால்பிடிக்கின்றதுகள் இதற்காக வெட்கப்படுகின்றேன்.
“வடக்கு, கிழக்கு இணையவேண்டும் அதற்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும்” ஐயா உங்கள் அரசியல் அனுபவம் வயது முதிர்ச்சி உங்கள் பக்குவம் இவை எல்லாவற்றிற்குள்ளும் ஒழிந்திருந்த அந்த இனத்துவேசத்தை நீங்களும் கொப்பளித்துவிட்டீர்கள் நியாயத்தின் பக்கம் இருக்க வேண்டிய நீங்களும் இனவாதிகளோடு கைகோர்த்து அநீதியின் பக்கம் சென்றுவிட்டீர்களே!!!
எங்கள் சமூகத்தை சேர்ந்த பல ஒட்டுண்ணிகள் அதிகாரத்திற்காக உங்கள் வால்பிடிக்கின்றதுகள் இதற்காக வெட்கப்படுகின்றேன் நாட்டில் முஸ்லிம்களுக்கு எங்கு பிரச்சினை என்றாலும் உங்கள் இல்லத்திலும், பாராளுமன்றத்திலும் உங்களை சந்தித்து பலமுறை எங்கள் பிரச்சினையை உங்களிடம் சொன்னார்களே உலகம் அறியாதவங்க.
வடக்கு கிழக்கு பிரிந்திருக்கும்போதே ஓர் அடிப்படை நம்பிக்கை சார்ந்த விடயத்துக்கு நீதியான தீர்வு சொல்லமுடியாத நீங்களா வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு தீர்வுத்திட்டத்தில் பங்கு கொடுக்கப்போகிறீர்கள்? எங்களது சந்தேகத்தை நீங்கள் உறுதிப்படுத்திவிட்டீர்களே…
சிறுபான்மை சமூகங்களான நாங்கள் ஒற்றுமைப்பட்டு வாழவேண்டும் என்ற கனவுக்கு பல இனவாதிகள் கல்லைதூக்கிப்போடும்போது தடுக்கவேண்டிய நீங்கள் இப்படி தட்டிக்கொடுக்கிறீர்களே. என பொறியலாளர் சிப்லி பாறூக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.