வாழைச்சேனை பொலிஸ் ஏற்பாட்டில் 3000 உணவு பொதி வழங்கல்

வெசாக் தினத்தை முன்னிட்டு வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு வாழைச்சேனைப் பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தம்மிக தயானந்த மற்றும் பெண்கள் சிறுவர் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.பத்மலதா, நிர்வாகப் பொறுப்பதிகாரி எல்.ரி.பண்டார, வாழைச்சேனை பிரதேச செயலக கிராம சேவை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானங்களை பொது மக்களுக்கு வழங்கினர்.

சுமார் 3000 பகலுணவுப் பொதிகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டதுடன், இவ்வன்னதான நிகழ்வை ஜேர்மன் நாட்டில் வசிக்கும் காரளசிங்கம் சகாதேவா, வாழைச்சேனை கோறளைப்பற்று கிராம சேவையாளர்கள், எரிபொருள் நிலைய உரிமையாளர் எஸ்.சோமஸ்கந்தராஜா ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இவ்வெசாக் வைபவம் இன நல்லிணக்க உறவுப் பாலமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.