மட்டக்களப்பு நகரில் வெசாக் கூடுகளுக்கு ஒளியூட்டும் நிகழ்வு

(சிவம்)
புத்தபிரானின் பிறப்பு, இறப்பு மற்றும் பரிநிர்மாணம் என்பவற்றைச் சித்தரிக்கும் வெசாக் பண்டிகை நாடெங்கிலும் அனுஷ;டிக்கப்படுவதை முன்னிட்டு மட்டக்களப்பிலும் வெசாக் கூடுகளுக்கு ஒளியூட்டும் நிகழ்வு நேற்று (29) மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான வைபவத்தில் மங்களராமய விகாரை வளாகம், பொலிஸ் சுற்றுவட்டம், சிரேஷ;ட பிரதிப் பொலிமா அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் வளாகங்களில் வெசாக் கூடுகளுக்கு மின்னொளி ஊட்டப்பட்டதோடு தானசாலைகளும் அமைக்கப்பட்டு சிற்றூண்டிகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு பிரதம பொலிஸ் நிலைய வளாகத்தின் முன்பாக இதன் பிரதான நிகழ்வு இடம்பெற்றபோது மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் சமய அனுஷ;டானங்களை மேற்கொண்டதோடு சிற்றூண்டிகளையும் வழங்கி வெசாக் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
கிழக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிமா அதிபர் கபில ஜயசேகர, மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர, பிரதம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தீகாவத்துர, மட்டக்களப்பு வர்த்தக சங்கத் தலைவர் எம்.செல்வராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நகரில் அமைக்கப்பட்டள்ள வெகாக் கூடுகளை பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு பார்வையிட்டதைக் காண முடிந்தது