படுவான் முத்தமிழ் முரசும், இரத்ததான நிகழ்வும் 2018

படுவான் முத்தமிழ் முரசும், இரத்ததான நிகழ்வும்
படுவான் முத்தமிழ் முரசு நிகழ்வுகள் (28) சனிக்கிழமை ஆரம்பமானது. கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா கலைக்கழகத்தின் 1ம் ஆண்டு நிறையொட்டி நடாத்தப்படும் படுவான் முத்தமிழ் முரசின் ஆரம்ப நிகழ்வானது இரத்ததானம் வழங்கலுடன் ஆரம்பிக்கப்பட்டு இன்று (30) இரவு கலைச் சங்கமத்துடன் நிறைவுற உள்ளது.

கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ண மிசன் வித்தியாலயத்தில் ஆரம்பமான இரத்ததான நிகழ்வில் தவிசாளர் சி.புஸ்பலிங்கம், தான்தோன்றீஸ்வர ஆலய பிரதம குரு மு.கு.சச்சிதானந்தம், இரத்த வங்கி வைத்தியர் க.விவேகானந்தநாதன், கிராம உத்தியோகத்தர் சி.ஜீவிதன் மற்றும் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது 52ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியிருந்தனர்.

ஈஸ்வரா கலைக்கழகத்தின் தலைவர் பி.நீதிதேவன் தலைமையில் மூன்று நாட்களாக நடைபெறும் இந் நிகழ்வின் 2ம் கட்ட நிகழ்வுகள் தான்தோன்றீஸ்வரர் கலையரங்கில் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் செல்வி. அகிலா கனகசூரியம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்ள இரவு (29) மாணவர்களால் நடாத்தப்பட்டதை தொடர்ந்து 3ம் கட்ட நிகழ்வுகள் இன்று இரவு (30) மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஸ், தவிசாளர் சி.புஸ்பலிங்கம் ஆகியோரை அதிதியாக கொண்டு அதே அரங்கில் கலைக்கழகத்தால் நடாத்தப்படவுள்ளது.