ஊடகவியலாளர்கள் ஒற்றுமை இல்லை எப்படி தமிழ்தேசியகூட்டமைப்பு ஒற்றுமை பற்றி கதைப்பது பா.அரியநேத்திரன் மு.பாஉ

மாமனிதர் சிவராம் படுகொலைசெய்யப்பட்டு இன்று 13,வருடங்கள் அவரின் கொலைக்கு நீதி கிடைத்ததா கொலையாளி தண்டிக்கப்பதா இல்லை அவரின் வரலாறுகளை மட்டுமே நாம் உச்சரிக்கின்றோம் ஆனால் அவர் மட்டுமல்ல கடந்த காலத்தில் படுகொலைசெய்யப்பட்ட 46, ஊடகவியலாளர்களை கொலைசெய்த எவருமே கைதாகவில்லை என்ற செய்திதான் இன்றும் உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கைதமிழரசு கட்சி தலைவரும் சிவராமுடன் இணைந்து பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியாளருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் மேலும் கூறினார்,

மாமனிதர் சிவராம் அவர்களின் 13,வது ஆண்டு வணக்க நிகழ்வு 28/04/2018,ல் மட்டக்களப்பு மறைமாவட்ட கத்தோலிக்க மண்டபத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் இ.பாக்கியராசா தலைமையில் இடம்பெற்றது அதில் உரையாற்றிய பா.அரியநேத்திரன் மேலும் கூறுகையில்.

மாமனிதர் சிவராம் அவர்களின் வரலாறுகள் பற்றி அவரின் ஊடக இலக்கிய எழுத்து பல்துறைபற்றிய ஆழுமை பற்றிய சகல விடயங்களும் பலர் அறிந்தவைகள்தான் அவரை வரலாற்றையோ அவரின் புகழையோ மட்டும் பறைசாற்றுவதால் அவரின் கொலைக்கான நீதி குடைத்துவிடும் என்று இல்லை அவர்மட்டுமல்ல கடந்த காலங்களில் படுகொலைசெய்யப்பட்ட 46,ஊடவியலாளர்களின் படுகொலைகள் மட்டுமன்றி தமிழினப்படுகொலைகள் அத்தனைக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை ஆட்சிகள் மட்டும் மாறும்போது ஒவ்வொரு பெயர்கள் சூட்டப்படுகிறது மகிந்த அரசின் கொடூர ஆட்சியும் மைத்திரி அரசின் நல்லாட்சியும் எந்த ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கும் நீதியை பெற்றுத்தரவில்லை ஆட்சியாளர்களின் நிறமும் முகமும் மாறுகிறது ஆனால் குணம் ஒன்றாகவே உள்ளது.

இந்த வருடம் மாமனிதர் சிவராமின் 13,வது நிகழ்வைகூட மட்டக்களப்பில் எல்லோரும் இணைந்து ஓரிடத்தில் நினைவுகூரமுடியாமல் மூன்றுவிதமாக ஊடகவியலாளர்கள் இந்த நிகழ்வை நடாத்தியது பெரும் கவலையான விடயம் அதேநேரத்தில் இங்கு உரையாற்றிய வடமாகாண ஊடக அமைப்பை சேர்ந்த ஒருவர் தமிழ்தேசியகூட்டமைப்பை உருவாக்க காரணகர்த்தாவாக இருந்த மாமனிதர் சிவராமின் நிகழ்வு தினத்தை தமிழ்தேசியகூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகள் தொடர்சியாக பங்கேற்க முடியாமல் இடையில் இந்த நிகழ்வில் இருந்து விலகி செல்பவர்கள் எப்படி மாமனிதர் சிவராமுக்கு அஞ்சலி செலுத்தப்போகிறார்கள் எப்படி ஒற்றுமையாக செயல்படுவார்கள் என்ற கருத்தைமுன்வைத்தார்.

உண்மையில் தமிழ்தேசியகூட்டமைப்பு மாமனிதர் சிவராமை எந்தவிதத்திலும் குறைத்துமதிப்பிடவில்லை அவருக்கு அஞ்சலி செலுத்தாமல் தமிழ்தேசியகூட்டமைப்பு இருக்கவில்லை தமிழ்தேசியகூட்டமைப்பை பற்றி குற்றம் குறை கூறுபவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையைபற்றி கதைப்பவர்கள் குறைந்தபட்சம் மாமனிதர் சிவராமின் நிகழ்வைக்கூட இன்று எல்லா ஊடகவியலாளர்களும் இணைந்து ஓரிடத்தில் ஒற்றுமையையாக செய்யமுடியவில்லை தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒற்றுமைபற்றி கதைக்கும் ஊடகநண்பர்கள் ஊடகத்துறையில் பணியாற்றும் எல்லோரும்

ஒற்றுமையாக செயல்படுகிறார்களா என்பதையும் ஊடகத்துறைசார்ந்வர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும் என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மாமனிதர் சிவராமை கொலைசெய்தவர்கள்
தமிழ்தேசியகூட்டமைப்பில் உள்ளனர் எனவும் சிலர் குற்றம் சுமத்துகின்ளனர் மாமனிதர் சிவராமை கொலைசெய்தவர்கள் தமிழ்தேசியகூட்டமைப்பில் இருந்தாலும்சரி அல்லது எங்கு இருந்தாலும்சரி குற்றவாளிகள்

விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் அதற்கான நீதி விசாரணை செய்யப்படவேண்டும் இதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

தமிழ்தேசியகூட்டமைப்பை பற்றி விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு ஆனால் சிலர் பாதைமாறி பேரினவாதக்கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டு உத்தமர்கள் போல நடிப்பதும் தமிழ்தேசிய கூட்டமைப்பை விமர்சிக்கவும் அவ்வாறானவர்களுக்கு உரிமை இல்லை.
சுட்டுவிரலால் எதிரியைக்காட்டி குற்றம் கூறுகையில் மற்ற மூன்றுவிரல்களும் மார்பை காட்டுவதை புரிந்துகொள்ளவேண்டும் கடந் மூன்றுவருடங்களுக்கு முன்பு எந்த ஒரு ஊடகவியலாளர் நிகழ்வையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எவரும் துணிந்து நடத்தவரவில்லை எந்தவொரு படுகொலை நினைவும் எவரும் நடத்துவதற்கு முகம் காட்டவில்லை
ஆனால் நாம் தமிழ்தேசியகூட்டமைப்பு மூலமாகவே மட்டக்களப்பில் முள்ளிவாய்கால் நினைவு, கொக்கட்டிச்சோலைபடுகொலைநினைவு, வந்தாறுமூலைபடு கொலைநினைவு, சத்துருக்கொண்டான்படுகொலைநினைவு,
அம்பாறைவீரமுனைபடுகொலைநினைவு,அன்னைபூபதி நினைவு
ஏன் மாவீரர்தின நினைவுகளைக்கூட நடத்தினோம் ஆனால் இன்று அரசியல் வாதிகள் நினைவுகளுக்கு தேவையில்லை
அவர்கள் படுகொலைநினைவுகளில் கலந்து கொள்ளக்கூடாது எனவும் குறுகிய அரசியல் லாபம் தேடக்கூடாது எனவும் பலர் கதைக்கிறார்கள் என்னைப்பொறுத்தவரை சகல படுகொலைகளும் அரசியல் தீர்வுக்கான இனப்பிரச்சனை தொடர்பான அரசியல் போராட்டம்,ஆயுதப்போராட்டம் எல்லாமே அரசியலை முன்நிறுத்திய போராட்டங்களே

அப்படியானால் அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொள்வதில் என்ன தப்பு உள்ளது அடக்குமுறை காலத்தில் படுகொலைகளை நினைவுகூர அரசியல்வாதிகள் தேவை அடக்குமுறையற்ற காலத்தில் நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகள் தேவையில்லை இதுதான் இன்றைய குறுகிய சுயலாப சிந்தனை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் எனவும் அரியநேத்திரன் மேலும் கூறினார்