வெல்லாவெளிப்பிரதேசத்தில் நுகர்வோருக்கு உதவாத உணவுகள்

வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட வெதுப்பக உணவு வியாபார   நடவடிக்கையில் ஈடுபட்ட முச்சக்கரவண்டிகளை பொதுச் சுகாதார பரிசோதகர்கள்  மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையின்போது  நுகர்வோருக்கு உதவாத உணவுகள் கைப்பற்றப்படு அழிக்கப்பட்டதுடன் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு சுகாதாரம் சம்பந்தமாக ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது

 வெதுப்பக உணவு வியாபார வண்டிகளில்  விற்பனை செய்யும் போது ஏற்படுகின்ற சுகாதார பிரச்சினைகளை பரிசோதிப்பதற்கான குறித்த பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி க.குணரெட்ணம் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட குறித்த சோதனை நடவடிக்கையில்; வெல்லாவெளி பிரதேச சபை தவிசாளர் யோ.ரஜனி,பொதுச்சுகாதார பரிசோதகர்களான யோகேஸ்வரன்,கு.குபேரன்,சி.சிவசுதன், சி.ஜீவிதன் அகியோர் பங்குபற்றியிருந்தனர்.
இதன்போது 8 முச்சங்கர வண்டிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடாத்தப்பட் நுகர்வோருக்கு உதவாத ஒரு தொகை உற்பத்திகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன். வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கான சுகாதாரம் சம்பந்தமான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர் கு.குபேரன் அவர்கள் தெரிவித்தார்.