படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு தின அனுஸ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும் இராணுவ ஆய்வாளருமான தர்மரெட்ணம் சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு தின அனுஸ்டிப்பு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள மறைக்கல்வி நடு நிலைய மண்டபத்தில் 28ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது.

 
இதன்போது சிவராமின் உரவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்சூடி தீபச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுப் பேர​ரு​ரைகளும் இடம்பெற்றது.
 
இந் நிகழ்வில், வடக்கு

​ ஊடக அமையம் ஊடகவியலாளர்கள்​

, கிழக்கு, தெற்கு, கொழும்பு, மலையகம் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், சிவராமுடன் இணைந்து பணியாற்றியவர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 
இதன்போது சிரேஸ்ட ஊடகவியலாளரும் தற்போது சுவிஸ் நாட்டில் வசித்து வருபவருமான சண். தவராஜாவின் ‘தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு’  என்ற கட்டுரைத் தொகுப்பு நூலும் அறிமுகம் செய்து வைக்கப்படது.
 
தராகி  அழைக்கப்படும் தர்மரெட்ணம் சிவராம் கொழும்பில் வைத்து கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி வெள்ளை வானில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கருகில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இருப்பினும் இது வரையில் இவருடைய படுகொலை தொடர்பான விசாரணைகள் நிறைவடையவோ குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.