மட்டக்களப்பில் இன்று ஹேர்பேர்ட் கிண்ண கூடைப்பந்தாட்டத் தொடரின் இந்த வருடத்திற்கான போட்டிகள்,

ஹேர்பேர்ட் கிண்ண கூடைப்பந்தாட்டத் தொடரின் இந்த வருடத்திற்கான போட்டிகள், இம்மாதம் 28ஆம், 29ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியின் பழைய மாணவர்களினால் (கொழும்புக் கிளை) ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளன

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு வருகை தந்ததிருச்சபை ஊழியர்களில் ஒருவரான போற்றுதலுக்குரிய இயூஜின் ஹேர்பேர்ட்அடிகளார் மட்டக்களப்பு மாவட்டத்தின் கூடைப்பந்து விளையாட்டுக்கு ஆற்றியசேவைகளை நினைவுகூறும் விதமாக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் இத்தொடரின் ஏழாவது பருவகாலப் போட்டிகளே இம்முறை இடம்பெறவுள்ளன.

 இந்தப் பருவகாலத்திற்கான ஹேர்பேர்ட் கிண்ணம் பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதின் கீழான கூடைப்பந்தாட்ட தொடராக அமையவுள்ளது. எனவே, இந்த ஆண்டுதொடரில் நாடுபூராகவும் கூடைப்பந்தாட்டத்திற்கு பிரபல்யமாக இருக்கும்பாடசாலைகள் பங்குபற்றுகின்றன.தொடரின் போட்டிகள் அனைத்தும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியின்கூடைப்பந்து (ஹேர்பேர்ட்) அரங்கிலும், மியானி ஆண்கள் நகர கூடைப்பந்தாட்டஅரங்கிலும் இடம்பெறவுள்ளன