வட மாகாண முதலமைச்சர் பதவிக்காக போட்டியிடும் எண்ணம் இல்லை

இலங்கையில் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு, பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்து பலமான கூட்டு அரசாங்கத்தை உருவாக்குவது கட்டாயமானது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதேநேரம், தமக்கு வட மாகாண முதலமைச்சர் பதவிக்காக போட்டியிடும் எண்ணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.