இராசமாணிக்கம் அமைப்பின் சேவையினை கிராமந்தோறும் விஸ்தரிக்க திட்டம்

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் சேவைகளை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டுசெல்ல வேண்டும் எனவும் அதனூடாக மக்களுக்கு உதவிகளை மேலும் செய்யலாம் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். அதற்கான பூர்வாங்க மக்கள் சந்திப்பு காந்திபுர கிராம மக்களுடன் நடைபெற்றது.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது, எமது அமைப்பின் சேவைகள் கிராமந்தோறும் ஒவ்வொரு மக்களுக்கும் கிடைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். கிராமங்களில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் குழுக்களாக மக்களை ஒன்றிணைத்து அதனூடாக கல்வி, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் ஏனைய உதவிகளையும் இக்குழுக்கள் ஊடாகவே நாம் செய்ய தீர்மானித்துள்ளோம் எனவும் இந்த திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் முதலில் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதன் முதலாவது கூட்டத்தில் பயனாளிகளின் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு அப்பியாச புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டது.