அபாயா விவகாரம்இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

திருகோணமலை பாடசாலையில் அபாயா அணிந்துசென்ற முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண கமஆளுநர் ரோஹித்த போகொல்லாயுடன் அவசர கலந்துரையாடலை இன்று -27- மேற்கொண்டுள்ளார்.

இதன்போது குறித்த விவகாரத்தை கல்வியமைச்சர் அகிரவிராஜ் காரியவசத்திடம் கொண்டுசென்று அவர் மூலமாக இதனை திர்க்க நடவடிக்கை மேற்கொளள்வததென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அபாயா விவகாரம், அபாயா அணிந்துசென்ற ஆசிரியைகள் இடமாற்றம் போன்ற குறித்து ஏனைய முஸ்லிம் அரசியவ்வாதிகளுடன் தாம் இணைந்து செயற்படவும், அதற்கான போராட்டங்களில் பங்கேற்க தயாரெனவும் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்துள்ளார்.