புணாணையில் நேருக்கு நேர் கார் மோதியதில் மூவர் காயம்

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின் புணாணை பிரதேசத்தில் புதன்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த காரும், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்துச் சம்பவத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சைகள் பெற்ற நிலையில் வீடு திரும்பியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.