மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 41ஆவது ஆண்டு நினைவுதினம் அனுஸ்டிப்பு.

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 41ஆவது சிரார்த்த நினைவுதினம் இன்று வியாழக்கிழமை (26.4.2018) காலை 9.00 மணியளவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலத்தில் இளைஞர் அணியின் உப-தலைவர் வீ.பூபாலராசா தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது.இதன்போது தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு ,ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி-யோகேஸ்வரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன்,மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தியாகராசா-சரவணபவான்,சிரேஸ்ட ஊடகவியலாளரும் மாநகசபை உறுப்பினருமான சிவம்பாக்கியநாதன்,மாநகரசபை உறுப்பினர்கைள்,தமிழரசுக்கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கி வைத்தியர்கள்,தாதிஉத்தியோகஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.தந்தை செல்வாவின் 41ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு  இரத்ததானம் இடம்பெற்றது.