மாவீரர் தினத்தையும், படுகொலை தினத்தையும் இதயசுத்தியுடன் அனுஸ்டிக்க வேண்டும் – சி.புஷ்பலிங்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களை தியாகம் செய்த பூமி இந்த மண்முனை தென்மேற்கு பிரதேசசபை அவர்களை மறந்து இங்கு செயலாற்றமுடியாது என மண்முனை தென்மேற்கு பிரதேசசபை யின் முதலாவது கூட்டத்தில் கொள்கை விளக்க உரையை  24/04/2018, நிகழ்த்திய மண்முனை தென்மேற்கு பிரதேசசபை யின் தவிசாளர் சி.புஷ்பலிங்கம் தெரிவித்தார்.

அவர் தமது கொள்கைவிளக்க உரையில் மேலும் கூறுகையில் இந்த சபையில் உள்ள அனைத்து கட்சியூடாகவும் தெரிவுசெய்யப்பட்ட பதினாறு உறுப்பினர்களும் கடந்த முப்பது வருடங்களாக தமிழ்தேசிய விடுதலைக்காக மனதார உழைத்தவர்கள்தான் அத்தனை உறுப்பினர்களும் மாவீரர் குடும்பத்தை சேர்ந்வர்கள்தான் இதை எவரும் மறுக்க முடியாது.

ஆனால் கடந்த உள்ளூராட்சி சபைதேர்தலில் தமிழ்தேசியகூட்டமைப்பு இந்த சபையை கைப்பற்றினாலும் ஏனய உறுப்பினர்கள் அவர்கள் சார்ந்த கட்சியூடாக இங்கு பிரதிநித்துவப்படுத்தினாலும் அனைவரும் இணைந்து எமது பிரதேசத்தை வளமுள்ள ஒழுக்க முள்ள அபிவிருத்தியடைந்த பிரதேசமாக மாற்ற ஒற்றுமையாக கட்சி பேதங்களை மறந்து செயல்படுவோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த ஒரு பிரதேச்சபையிலும் இல்லாத மூன்று தேசத்து கோயில்களான ஶ்ரீ தான்தோன்றீஷ்வரர் ஆலயம்,தந்தாமலை முருகன் ஆலயம்,பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலயம் எமது மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லையில் அமைந்திருப்பது எமக்கு பெருமைதரும் விடயமாகும் ஆனால் அதைவிட ஏறக்குறைய ஆயிரம் மாவீர்ர்களையும்,போரில் அங்கவீனர்களான நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகளையும் நூற்றுக்கணக்கான பெண் தலைமைதாங்கும் குடும்பங்களை கொண்ட பிரதேசமாகவும்,போரினால் பாதிக்கப்பட்ட பல சிறார்களை கொண்ட பிரதேசமாகவும் வறுமையில் வாடும் குடும்பங்களை கொண்ட பிரதேசமாகவும் காட்சியளிக்கிறது.

இங்கு விவசாயம்,மீன்பிடி,கால்நடைவளர்ப்பு என்பன மூலத்தொழிலாக காணப்பட்டாலும் ஆயிரக்கணக்கான அரச அலுவலர்கள் பட்டதாரிகள் கூலிவேலைசெய்வோர் என வாழ்கின்றனர்.
எமது பிரதேசத்தை கல்வி ஒழுக்கம் உள்ள பிரதேசமாக மாற்றுவதற்கு நாம் எல்லோரும் திடசங்கற்பத்துடன் உழைக்கவேண்டும் முக்கியமாக எல்லைக்கிராமங்களான கெவிளியாமடு,கச்சக்கொடிசுவாமிமலை,புளுகுநாவ,தாந்தாமலை போன்ற பகுதிகளில் வாழும் எமது மக்களின் போக்குவரத்துக்கள் சுகாதாரம் குடிநீர் வசதிகளையும் எமது ஏனய வட்டாரங்களுக்கு வழங்கும் முன்னுரிமையை நாம் வழங்கவேண்டும் எமது பிரதேசசபை யில் நிதிவளம் இல்லாத சபையாகும் திட்ட முன்மொழிவுகள் தயாரித்து அதை சம்மந்தப்பட்ட நிதிவழங்குனர்களை அணுகி அதை செயலாற்ற இங்குள்ள பதினாறு உறுப்பினர்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

முக்கியமாக எமது பிரதேசத்தில் பொது நிகழ்வாக ஏனய மத கலாசார விளையாட்டு கல்வி நிகழ்வுகளுக்கு அப்பால் இராணுவத்தால் படுகொலைசெய்யப்பட்ட கொக்கட்டுச்சோலை படுகொலை நினைவு வருடாவருடம் ஜனவரி 28,லும்,மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் கார்திகை 27ல் மாவீரர் நினைவு வணக்கத்தையும் எமது பிரதேசசபை ஊடாக இதய சுத்தியுடன் தொடர்ந்தும் நடத்தவேண்டும் அதற்காக மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தை சுற்றிவர வேலிஅமைத்து அதை எமது சபை பராபரிக்கவேண்டும் இது இங்குள்ள அனைவரினதும் வரலாற்றுக்கடமை எமது சபை நான்குவருடம் மட்டுமே இயங்கும் அதன்பின் இந்த சபையை மேலும் ஒருசாரார் பாரம் எடுக்கும் போது எமது பணியை அவர்கள் பாராட்டக்கூடிய விதத்தில் அவர்களுக்கு கையளிக்கவேண்டும் பாகுபாடுகளைமறந்து வேற்றுமையை விலக்கி எல்லோரும் இணைந்து எமது மண்முனை தென்மேற்குபிரதேசசபையை கட்டி எழுப்புவோம் எனவும் புதிய தவிசாளர் சி.புஷ்பலிங்கம் மேலும் கூறினார்.