தந்தை செல்வா அவர்களின் 41வது நினைவு தினத்தை முன்னிட்டு  மட்டக்களப்பில் இரத்தான நிகழ்வு

0
614

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகரும், தலைவருமான தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 41வது நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் 2018.04.26ம் திகதி மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள கட்சி மாவட்டக் காரியாலயத்தில் காலை 08.30 மணிக்கு இரத்ததான நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி உபதலைவரும், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமாகிய வி.பூபாளராஜா தலைமையில் மேற்படி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன். இதில் மக்கள் பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள், இளைஞர் அணி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

உதிரம் கொடுத்து உயிர் காப்போம் என்கின்ற வகையில் இரத்ததானம் வழங்க அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் இதன் போது அழைப்பு விடுத்துள்ளனர்.