சுமோ மல்யுத்த போட்டியில் மட்டக்களப்பு வீரர்கள் பதக்கம் வென்றனர்

0
565

சர்வதேச Sumo (சுமோ) மல்யுத்த சம்மேளனத்தின் இணை அனுசனையுடன் இலங்கை சுமோ மல்யுத்த சங்கத்தினால் நடாத்தப்பட்ட இரண்டாவது தேசிய வளர்ந்தோருக்கான சுமோ மல்யுத்த விளையாட்டுப் போட்டிகள் கொழும்பு வை.எம்.சி.ஏ. உள்ளக விளையாட்டு அரங்கில் சங்கத்தின் தலைவர் கீத்திசிறி டி சொய்ஸா தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக் கழக வீரர்கள் சுமோ மல்யுத்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சுப்பிரமணியம் திபாகரன் தலைமையில் பங்கு கொண்டதுடன் பதக்கங்களை பெற்று மட்டக்களப்பு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

115 கிலோ பிரிவில் ம.வினோத் வெள்ளிப்பதக்கத்தினையும் திறந்த நிறை பிரிவில் வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டார். ரி.தக்சன், இ.பானுசன், எஸ்.நிதுர்சன் ஆகியோர் வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டனர். மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியரும் பயிற்றுவிப்பாளருமாகிய சு.திபாகரன் இப்போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களினை பெற்றுக்கொண்டார்.

சர்வதேச சுமோ மல்யுத்த சங்கத்தின் பிரதிநிதிகள் அதிதிகளாக கலந்து கொண்டதுடன் நடுவர்களாகவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.