இன ஐக்கியத்தை வெளிக்காட்டவே மூவின மக்கள் வாழும்’ பின்தங்கிய எல்லைப்புறத்தில் நாம். – மட்டு அரசாங்க அதிபர் மா. உதயகுமார்

0
697

எமது நாட்டில் இன ஐக்கியத்தை வெளிக்காட்டவே மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறமான மூவின மக்கள் வாழும் கச்சக்கொடி கிராமத்தில் நாம் இன்று கூடியிருக்கின்றோம் என்றார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார்.

மலர்ந்துள்ள தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வை நேற்று (22) தலைமையேற்று நடாத்தியபோதே அவர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்து தனது உரையில் குறிப்பிடுகையில் வருடந்தோறும் நகரை அண்டிய பகுதியிலே இவ்வாறான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறுகின்றது. அதனால்தான் இன்றைய நிகழ்வு பின்தங்கிய கிராமமான மூவின மக்கள் வாழும் கச்சக்கொடி கிராமத்தில் இடம்பெறுவதுடன் இம்மக்களின் வாழ்வியலை அவர்களது துன்பங்களை எல்லோருக்கும் எடுத்துக்காட்டுவதுடன் அதில் நாம் அனைவரும் இணைந்து கொள்வதும் இன்றைய நாளில் அவர்களை மகிழ்விக்கவே இவ்வாறான இடத்தினை தெரிவு செய்தோம் என்றார்.

நாட்டின் கௌரவ ஜனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் தலைவர்களின் விருப்புக்களுக்கமைய மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கோடும் அரசாங்கத்தின் அபிப்பிராயங்களை வெற்றி கொள்ளச் செய்யும் நோக்கத்துடனும் பிரதேச செயலகங்கள், ஸ்ரீலங்கா இராணுவம், கடற்படை, வான்படை, இலங்கைப் பொலிஸ் ஆகியவற்றின் ஒத்துழைப்புடனும் இந்நிகழ்வு நடைபெறுவதாக குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் அரசாங்க அதிபருக்கு விவசாய அமைச்சின் கௌரவ செயலாளர் அவர்களால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பத்திற்கு வழங்குமாறும் கையளிக்கப்பட்ட பெறுமதியான தங்க மாலை ஒன்றினை வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தாந்தாமலை கிராம உத்தியோகத்தர் பிரிவின் மக்களடியூற்று கிராமத்தில் வசிக்கும் (சிவலிங்கம் யசோ) தாய் தந்தையை இழ்ந்த 5 அங்கத்தவர்களை கொண்ட குடும்பத்திற்கு வழங்கியதுடன் கச்சக்கொடி கிராமத்தில் இருந்து தூர இடத்திற்கு பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் வழங்கப்பட்டது.