திறைசேரி முகாமைத்துவசேவைகள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி கோபாலரெத்தினம் இந்தோனேசியா பயணம்!

0
1019

(காரைதீவு சகா)

இலங்கை திறைசேரியின் முகாமைத்துவசேவைகள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி மூத்ததம்பி கோபாலரெத்தினம் இன்று (21) சனிக்கிழமை இந்தோனேசியா பயணமாகின்றார்.
இலங்கை நிருவாகசேவையின் அதிவிசேட சிறப்புத்தரத்தை ச்சேர்ந்த முதலாந்தர உயரதிகாரியான கலாநிதி கோபாலரெத்தினம் மட்டக்களப்பு செட்டிபாளையத்தைச் சேர்ந்தவராவார்.

நாளை 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவில் ஆரம்பமாகும் சர்வதேச மூலோபாய முகாமைத்துவப்பயிற்சி நெறியில் கலந்துகொள்வதற்காக அவர் இன்று பயணமாகின்றார்.
நாளை 22 தொடக்கம் எதிர்வரும் 30ஆம் திகதிவரை நடைபெறவிருக்கும் இப்பயிற்சிநெறியில் கலந்துகொள்வதற்காக இவருடன் இலங்கையிலிருந்து 36அதிகாரிகள் பயணிக்கின்றனர்.

பல்கலைக்கழகங்களின் பட்டப்பின்படிப்பு கற்கைகள் நிறுவகம் இவ்ஏற்பாட்டைச்செய்துள்ளது.

கிழக்கில் நாவிதன்வெளி திருக்கோவில் களுவாஞ்சிக்குடி போன்ற பிரதேசங்களின் பிரதேச செயலாளராக நன்கு அறியப்பட்ட கோபாலரெத்தினம் ஏலவே அவுஸ்திரேலியா இந்தியா மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு புலமைப்பரிசில்பெற்று சென்றுவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.