60 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கல்

0
720

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும், தேசிய நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும் தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் புதன்கிழமை மாலை இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எம்.ஹமீட், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தியாவட்டவான்; கிராம சேகவர் பிரிவிலுள்ள சிறிய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிராமிய பொருளாதார அமைச்சின் முப்பது இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் ஓடாவி உபகரணம், மேசன் உபகரணம், இடியப்பம் அவிக்கும் உபகரணம், மண் வெட்டி, எண்ணெய் தெளிக்கும் கருவி, தண்ணீர் பம், மீனவர் பாதுகாப்பு கவசம் உட்பட்ட உபகரணங்கள் 68 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு தேசிய நல்லிணக்க அமைச்சின் முப்பது இலட்சம் நிதி ஒதுக்கீட்டில்; புல் அரைக்கும் இயந்திரம், துவிச்சக்கர வண்டி, சோளம் பொறி இயந்திரம் உட்பட்ட பல்வேறு உபகரணங்கள் 52 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலியின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயலகங்கள் தோறும் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.