பன்குளம் எல்லைக்காளியம்பாள் முன்னிலையில் எதிர் கட்சித்தலைவர் ; இரா சம்பந்தனிடம் மக்கள் முன்வைத்த கோரிக்கை

0
889

பொன்சற்சிவானந்தம்

திருகோணமலை பன்குளம் எல்லைக்காளியம்பாள் ஆலய சூழலில் வாழ்ந்து பன்குளம் ,நொச்சிக்குளம் பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழும்மக்களை குடியமர்த்தி இந்த ஆலயம் சிறக்க எதிர் கட்சித்தலைவர் ; இரா சம்பந்தன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிக்கை விடப்பட்டுள்ளது.

அக்ஷய திருத்தியைதினமானநேற்றய தினம் பூர்வீகமான ஆலயமான பன்குளம் பறையனாளம் களம் பகுதியில் அமைய்பெற்ற ஸ்ரீ அருள்மிகு எல்லைக்காளியம்பாளின் திருப்பணியை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்த எதிர்கட்சித்தலைவர் இரா சம்பந்தனிடம் இக்கோரிக்கை விடப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர்பேரவை பொதுச்செயலாளர் , பெரியார்,சிவாஞானச்செல்வர் செ.சிவபாதசுந்தரம் இங்கு பேசும்போது இக்கோரிக்கையை முன்வைத்தார்.

அவர்தொடர்ந்து பேசுகையில் ,எங்கள் எல்லோரையும் வருத்திய வன்செயல் இங்கு தான்முதன்முதலில் வெடித்தது. அதனால் இங்கு வாழ்ந்த மக்கள் முற்றாக இடம்பெயர்நத நிலையில் உள்ளனர்.

இந்த ஆலயத்தில் தொண்டாற்றியவர்களை நாம் மறந்து விடமுடியாது. முத்தையா சுவாமியார்,செல்லத்துரைசுவாமியார்,அரசு ஸ்ரூடியோ உரிமையாளர் அரசு,அமரர் கணவதிப்பிள்ளை அவர்கள்,போன்ற வர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்களுக்குப்பின்னர்1970ம்ஆண்டுகால சூழலில் டாக்டர் சித்திரவேலு அவர்களின் புதல்வர் சிவ சுப்பிரமணியம்,அவர்கள் திரு குமாரசுவாமி அவர்கள்,இன்னும் சில அன்பர்களும்சேர்ந்து இங்கே வந்து சிறியளவிலே பூசைகளை நடாத்தி வந்தார்கள்.

இதை நான் ஏன்கூறுகின்றேன் என்றால் அவர்களுடையசேவையை நாம் மறக்ககூடாது.மதிக்க வேண்டும்1975ம்ஆண்டு பன்குளம் பொது நூலகத்திற்கு நூலகராக நான் பணியாற்றவந்தபோது,திருமுத்தையா சுவாமியார் அவர்கள் என்னை வந்து சந்தித்தார்.

அதன்பின்னர் நாங்கள் பன்குளம் இந்து இளைஞர் மன்றத்தை உருவாக்கி, அமரர் மாவட்ட இந்து இளைஞர்பேரவையின் முன்னாள் தலைவர் இறைபணிச்செம்மல் சங்கரப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்கள் எல்லைக்காளிக்கு பூசைகளை செய்துவந்தார்.

பின்னர் 1976ம்ஆண்டிலிருந்து இந்த ஆலயத்தை பேரவைமூலம் பரிபாலனம் செய்து வந்தோம்.

முதன்முதல் தைபூசப்பொங்கலை ஆரம்பகால குழுவிடமிருந்து பெற்று இரவிரவாக இங்கே நடாத்தினோம்.அதுமட்டமல்ல எங்கள் எல்லோரையுமே வருத்திய வன்செயல் இங்குதான் முதன்முதலில் வெடித்தது.

நாங்கள் காந்தியத்தின் உதவியோடு, இங்கே பல நற்காரியங்களை ஆற்றியிருந்தோம். ஆரம்பத்தில் நான் அதன் தலைவராக இருந்தேன். பின்னர் நண்பர்; குகதாசன் தலைவராக செயற்பட்டார். பிற்பட்டகாலத்தில் காந்தியம் இயங்கமுடியாமல் போய்விட்டது.

அந்தக்காலத்தில் மதிப்புக்குரிய எதிர்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் ஐயா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து எமக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

ஆகவே ஐயா அவர்களிடம் நான் மிகப்பணிவாக வேண்டுவது,இந்தப்பன்குளம் பகுதியிலே இருக்கின்ற இந்து இளைஞர்களை இந்த நிருவாகத்தினர் உள்வாங்கி,செயற்படவேண்டும்.

இங்கே ஏற்கனவே குடியமர்த்தியிருந்து வாழ்ந்த வந்த மக்கள் பன்குளத்திலும் நொச்சிக்குளத்திலும் தற்காலிகமாக தற்போது வசித்து வருகின்றார்கள்.

ஐயா அவர்கள் தன்னுடைய செல்வாக்கைப்பயன்படுத்தி, அந்த மக்களுக்கு இந்தப்பகுதியில் ஒரு வீடமைப்புத்திட்டத்தைமீள ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

அதன்மூலம் அந்த மக்கள் வழமைபோல் இந்த ஆலயத்தை திறம்பட நடாத்தி வழிபாடுகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும் . என்பதனை வினையமாக வேண்டி நிற்கின்றேன் எனவும் கோரிக்கை விடுத்தார்.