திருகோணமலை பன்குளம் ஸ்ரீ எல்லைக்காளியம்பாள் ஆலயத்திற்கான அடிக்கல்நாட்டுவிழாவில்எதிர்கட்சித்தலைவர் இரா சம்பந்தன்

0
843

பொன் சற்சிவானந்தம்

திருகோணமலைமாவட்டத்தின் வடக்கு எல்லைப்பகுதியான பன்குளம் பறையனாளங்குளம் பகுதியில் பூர்வீகமாக எழுந்தருளி அருள்பாலித்து வரும் பன்குளம் ஸ்ரீ எல்லைக்காளியம்பாள்ஆலயத்திற்கான அடிக்கல்நாட்டுவிழா ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அக்ஷய திருத்திய தினத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் எதிர்கட்சித்தலைவர் இரா சம்பந்தன்,பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம்,சம்பந்தனின் செயலாளர் குகதாசன்,முன்னாள் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, முன்னாள் இந்து இளைஞர்பேரவை பொதுச்செயலாளர். சிவஞானச்செல்வர் செ.சிவபாதசுந்தரம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அடிக்கல்லை வைபவரீதியாக நாட்டிவைத்தனர்.

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய ஆதீன கரத்தா வேதாகமாமணி சோ.இரவிச்சந்திரக்குருகள் அவர்களில் ஆசியுரையுடன் இந்நிகழ்வு நடந்தேறியது. இங்கு எதிர்கட்சித்தலைவர்உள்ளிட்டவர்கள் அடிக்கல்லை நாட்டிவைப்பதனைப்படங்களில்காண்க மாவட்டத்தின் எல்லைப்பகுதியான காட்டையண்மித்த பகுதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. கடந்த கால யுத்த நெருக்கடியான சூழலில் இவ்வாலயம் பல ஆண்டுகளாக பராமரிப்பற்ற நிலையிலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.கிழக்கில் வந்திறங்கிய தாக சொல்லப்படும் 7 அம்மன்களில் இதுவும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.