கிழக்கு மாகாணத்தில் முதல் பெண் தவிசாளர் வாழைச்சேனையில் பதவியேற்பு

0
793

வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தனது கடமைகளை இன்று புதன்கிழமை பொறுப்பேற்றார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் பிரதேச சபை செயலாளர் கே.தினேஸ்குமார் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப தலைவர் என்.திரவியம், கட்சி முக்கியஸ்தர்கள், உப தவிசாளர் த.யசோதரன் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப தலைவர் என்.திரவியம் முன்னிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தவிசாளராக பொறுப்பேற்றதும் வாழைச்சேனை பிரதேச சபை வளாகத்தில் இருபத்தைந்து பழமரக்கன்றுகள் சபை உறுப்பினர்களால் நாட்டப்பட்டதுடன், வாழைச்சேனை முஸ்லிம் பிரதேசத்தில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் சுத்தம் செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பம்;, பிரதேச வீதி மின்விளக்குகள் பொறுத்துதல் என மூன்று வேலைத் திட்டங்களை அமுல்படுத்தியுள்ளார்.

தவிசாளர் பதவியேற்றதன் பிற்பாடு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம் ஆகியோர் வருகை தந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.