அன்னை பூபதி நினைவாலயம் சிரமதானம்.

0
757
தேசத்தின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 30 வருட நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நாவலயிலுள்ள அவரது நினைவாலயம் மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சவணபவன், பிரதி மேயர் எஸ்.சத்தியசீலன் மற்றும் உறுப்பினர்களால்  இன்று (17) காலைசிரமதானம் செய்யப்பட்டது.

எதிர்வரும் 19 ஆம் திகதி  மட்டு. நாவலடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவு தூபிக்கு அருகில் காலை 10 மணிமுதல் 4 மணிவரை அடையாள உண்ணாவிரதமும், அதனைத் தொடர்ந்து அஞ்சலி நிகழ்வும் நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் காலை அவ்விடத்திற்கு வந்த மேயர் தியாகராஜா சவணபவன், பிரதி மேயர் எஸ்.சத்தியசீலன், திருச்செந்தூர் வட்டார உறுப்பினர் எஸ்.ஜெயந்திரகுமார் மற்றும் உறுப்பினர்கள் , நாவலடி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.சிறிக்காந்தன் மற்றும் உறுப்பினர்கள் நினைவாலயத்தினை துப்பரவு செய்தனர். இவர்களுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனும் இணைந்து கொண்டார்.