சுவிஸ் தேர்தலில் ஈழத்தமிழர் அமோக வெற்றி.

0
807

சுவிட்ஸர்லாந்தின் சூரிச் மாகாணத்தின் அடல்விஸ் நகரசபைத் தேர்தலில் ஈழத் தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி அமோக வெற்றி பெற்றுள்ளார்.

அவர் இரண்டாவது முறையாகவும் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

36 ஆசனங்களை கொண்ட குறித்த நகரசபைக்கு 140 க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டனர். அதில் கண்ணதாசன் முத்துத்தம்பி சோசலிசக் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்தார்.

சோசலிசக் கட்சி சார்பில் குறித்த நகர சபைக்கு 21 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதில் கண்ணதாசன் முத்துத்தம்பி ஐந்தாம் இடமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.