வாழைச்சேனை அந்நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா அரபுக் கல்லூரியின் 6வது மௌலவி, ஹாபிழ் பட்டமளிப்பு விழா

0
569

வாழைச்சேனை அந்நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா அரபுக் கல்லூரியின் 6வது மௌலவி, ஹாபிழ் பட்டமளிப்பு விழாவும், 7வது பரிசளிப்பு விழாவும் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

அரபுக் கல்லூரியின் தலைவர் எம்.எச்.முஹம்மட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வாழைச்சேனை அந்நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம்.றஹ்மதுல்லாஹ் (பலாஹி) கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக எகிப்து நாட்டில் இருந்து வருகை தந்தவர்களான அஷ்ஷெய்க் பத்ரி மன்ஸ{ர் காஸிம், அஷ்ஷெய்க் இப்றாஹீம் அப்துல் ஜலீல் மஹ்லூப், காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரி உப அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.அலியார் (பலாஹி) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பல்கலைக் கழகத்திற்கு தெரிவானவர்கள், டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்கள், ஏனைய துறைகளில் சித்தி பெற்றவர்களுக்கும் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன், 2016ம், 2017ம் ஆண்டுக்கான அல் ஆலிம் பட்டத்தினை பெற்ற இருபத்தி நான்கு பேருக்கும், 2016ம், 2017ம் ஆண்டுகளில் குர்ஆனை மனனம் செய்த அல் ஹாபிழ் பட்டத்தினை பெற்ற பதினொரு பேருக்குமாக முப்பத்தி ஐந்து பேருக்கு பட்டமளிப்பு வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு கல்லூரி மாணவர்களினால் கசிதாவும் இடம்பெற்றதுடன், விசேட பொற்பொழிவினை அக்கறைப்பற்று மர்கஸ் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.கலாமுல்லாஹ் ரஷாதி ஆற்றினார்.