கொக்கட்டிச்சோலையில் சௌபாக்கியா சித்திரைப்புத்தாண்டு விற்பனைச் சந்தை

0
927

(படுவான் பாலகன்) “சௌபாக்கியா” சித்திரைப்புத்தாண்டு விற்பனைச் சந்தை கொக்கட்டிச்சோலை மகா சங்க கட்டிட வளாகத்தில் இன்று(12) திறந்து வைக்கப்பட்டது.

சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களமும், பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் குறித்த சந்தையில் உள்ளுர் உற்பத்திகள் பலவும் விற்பனை செய்யப்பட்டன.

குறித்த சந்தையினை சமூர்த்தி திணைக்கள அதிகாரிகளும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் இணைந்து திறந்து வைத்தனர்.