மண்முனை தென் எருவில் பற்றில் பாரம்பரியம்பரிய  புத்தாண்டு விழா

0
745
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச கலாசார அதிகார சபையினால் நடாத்தப்பட்ட பாரம்பரியம்பரிய  புத்தாண்டு விழா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் சிவப்பிரியா , களுவாஞ்சிகுடி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி, கலாசார உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது தமிழர் கலாசாரத்தினை பேணும் உணவு வகைகளான   பொங்கல்,பணியாரம்,முறுக்குவகைகள்,அப்பம்,சோகி,தட்டைடை,தயிர், போன்ற  பாராம்பரிய உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டு அதன்பின்னர் பரிமாறப்பட்டது
அதுமாத்திரமின்றி கிராமிய பண்பாடுசார்ந்த விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் முகமாக கிராமிய விளையாட்டுகளான கிளித்தட்டு,தெத்திகோடு, போன்ற விளையாட்டுகளும் சிறுவர்களால் இதன்போது நிகழ்த்தி காட்டப்பட்டது.