மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் இருவர் பணி நீக்கம்

0
987

மட்டக்களப்பு, ஏறாவூரில் கொள்ளைச் சம்பவமொன்றில் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் தப்பியோடியதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தரர்கள் இருவர், உடனடியாக சேவையில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் பெண்ணொருவரின் கழுத்தில் இருந்து தங்கச் சங்கியை அறுத்துச் சென்ற சந்தேகநபர் ஒருவர், நேற்று (10) கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அந்நபர் தப்பியோடியதைடுத்து, தமது கடமையை சரியாகச் செய்யாத குற்றச்சாட்டில், சாஜன் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் சேவையில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டனர்.

இதேவேளை, தப்பியோடிய சந்தேகநபர், இன்று (11) அதிகாலை, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.(ச)