கிரான் ஆச்சிரமத்தில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்வு

0
793

யேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தினை சிறப்பித்து கிரான் மெதடிஸ்த வாலிபர் சங்கத்தினர் ஒழுங்கு செய்த இரத்த தான நிகழ்வானது கிரான் கிறிஸ்தவ சேவா ஆச்சிரமத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

கிரான் மெதடிஸ்த தேவாலய அருட்திரு.செங்கண் திருமறைதாசன் தலைமையில் நடைபெற்ற இரத்த தான நிகழ்வில் வாழைச்சேனை சேகர முகாமைக்குரு அருட்திரு. ஜோசப் உதயகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது 80 சர்வ மதத்தினரும் கலந்து கொண்டு உதிரத்தை தானமாக வழங்கினர்.

இவ் இரத்ததான நிகழ்வானது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்திய கலாநிதி க.விவேக்கின் வழிகாட்டலில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.