தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய உறுப்பினர்

0
1033

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாசிவன்தீவு கிராமத்தில் வறிய குடும்பத்தாரின் வீடு ஒன்றை புனர்நிர்மானம் செய்து உரியவரிடம் கையளிக்கப்பட்டது.

நாசிவன்தீவு கிராமத்தில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான தம்மிப்பிள்ளை ராகனி என்பவரின் வீடு முற்றுப் பெறாமல் இருந்ததை நேரில் சென்று பார்வையிட்ட பிரதேச சபையின் உறுப்பினர் க.கமலநேசன் உடனடியாக வீட்டினை புனர்நிர்மானம் செய்து தருவதாக வாக்குறுதியளித்தார்.

அதன்பிற்பாடு அவுஸ்ரேலியா அன்பாலயம் அமைப்பினரிடம் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் க.கமலநேசன் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் ஒரு இலட்சம் ரூபாய் நிதியினை அன்பளிப்பு செய்தனர்.

மேலும் பிரதேச சபையின் உறுப்பினர் க.கமலநேசனின் மூப்பதாயிரம் சொந்த நிதியுமாக சேர்த்து குறித்த வீடு புனர்நிர்மானம் செய்து வழங்கப்பட்டது. தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றிய உறுப்பினருக்கு வீட்டின் உரிமையாளர் நன்றி தெரிவித்தார்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் க.கமலநேசனினால் வறுமையை ஒழிப்போம் என்னும் தொனிப் பொருளில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.