வாள்வெட்டு குழுக்களை கைது செய்யமாறு கோரி கவனயீர்ப்பு

0
801
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புன்னச்சோலை பிரதேசத்தில் சில மாதங்களாக இரு வாள்வெட்டு குழுக்களுக்கிடையே இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக கைதுசெய்யப்பட்ட சுரேஸ்வாள்வெட்டுக்குழவை விடுதலை செய்ய வேண்டாம், வாள்வெட்டு குழுக்களை கைது செய்யமாறு கோரி அப்பிரதேச மக்கள் மட்டக்களப்பு காந்திபூங்காவின் முன்னாள் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இப் பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு கத்திகுத்து தாக்குதலில் இருவர் படுகாயமடைந்தனர் இச் சம்பவங்களையடுத்து இப்பிரதேசத்தில் பதற்றமான சூழ் நிலை ஏற்பட்டுள்ளது எனவே வன்செயலில் ஈடுபடும் குழுக்களை கைது செய்ய கோரி பிரதேச மக்கள் ஆர்பாட்டத்திற்க அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனையடுத்து காந்தி பூங்காவிற்கு முன்னாள் பிரதேச மக்கள் ஒன்றினைந்து  நியாயம் வேண்டும் நியாயம் வேண்டும் , நீதிவேண்டும் , வெட்டுக்கும்பலை விடுதலை செய்யாதே , பொதுமக்களின் பாதுகாப்பை பெற்றுத்தருவது யார், வெட்டுப்பட்டவர்களுக்க நீதிவேண்டும் என சுலோகங்கள் ஏந்தியவாறு; நூற்றுக்கு மேற்பட்டோர் காலை 10-30 மணிக்கு கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இதணைத் தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் ஆர்ப்பாட்டகாரர்களிடம் தாம் வாள்வெட்டுக் குழுக்களை கைது செய்து நிPதிp மன்றத்தில் ஆஜர்படுத்தியள்ளதாகவும் அவர்களை பிணையில் விடுவதே அல்லது வியக்கமறியலில் வைப்படீத நீதிமன்றத்தின் உத்தரவு அதில் நாங்கள் தலையிடமுடியாது எனவும் வன்முறையில் ஈடுபடுவெருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அங்கிருந்த கலந்து செல்லமாறு  அவர் தெரிவித்தார்
இருந்தபோதும் ஆர்ப்பாட்டகபரர்கள் தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடபட்டனர் இந்த இடத்திற்கு வந்திருந்த ஜக்கிய தேசிய கட்சியின் மாவட்ட இணைப்பாளர் வே.மகேஸ்வரனிடம அவர்கள் தமது நிலையை தெரிவித்து ததமபிரதேசத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தமாறு கோரி மகஜர் ஒன்றை கையளித்ததுடன் அவருடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மூவரை அழைத்துக் கொண்டு மட்டு தலைமையக பொலிஸ் பொறப்பதிகாரியடம் சென்று மகஜரை கையளித்த பின் ஆர்ப்பாட்டகார்கள் கலைந்து சென்றனர்.