மட். மாநகரில் சோமனும் பிள்ளையானும் இணைந்துஆட்சியமைக்க எடுத்த முயற்சி தோல்வி

0
1293

மட்டக்களப்பு மாநகரமுதல்வர் தெரிவில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் தமிழர்விடுதலைக்கூட்டணி இணைந்து (பிள்ளையான், சோமன் ) ஆட்சியமைக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் மகளிர் அணித்தலைவி மனோகரி    தமிழர் விடுதலைக்கூட்டணியைச்சேர்ந்த சிவலிங்கம் சோமசுந்தரத்தை முன்மொழிந்து இரகசிய வாக்கெடுப்பை கோரியதையடுத்து  எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

தெரிவினை பகிரங்கமாக நடாத்தவேண்டும் என 23பேரும் இரகசியமாக நடாத்த வேண்டும் என 15பேரும் கோரியிருந்த நிலையில் பகிரங்க வாக்கெடுப்பின்போது 25பேர் பேர் சரவணபவானுக்கு வாக்களித்தனர்.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் சரவணபவானை எதிர்த்து கல்லடி வட்டாரத்தில் போட்டியிட்ட ஜக்கிய தேசியகட்சி உறுப்பினர் சிவலிங்கம் சரவணபவானுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் ராஜன் ஈ.பி.டி.பி உறுப்பினர் சிவானந்தராஜாவும் சரவணபவானுக்கு ஆதரவாக வாக்களித்ததுடன் கருணா அம்மானின் கட்சியைச்சேர்ந்த வசந்தகுமார் சரவணபவானுக்கு எதிராக வாக்களித்தார்.