திருகோணமலை கோணேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சத்தின்மட்டக்களப்பு திருவிழா

0
921
திருகோணமலை கோணேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சத்தின் 4ம் நாள் மட்டக்களப்பு திருவிழா திங்கட்கிழமை நடைபெற்றது.
கடந்த 30 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவின் 4ம் நாள் மட்டக்களப்பு மாவட்ட திருவிழா இடம்பெற்றதுடன் எதிர்வரும் 16ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைபெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் ஏற்பாட்டில் இடம்பெற்ற பூசையில் மட்டக்களப்பு மாவட்ட இந்து வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் மட்டக்களப்பு இந்து மக்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது யாக பூசை வசந்த மண்டப பூசை மற்றும் சுவாமி வீதி வலம் வருதல் என்பன இடம்பெற்றதுடன் பூசைகள் யாவும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.எஸ்.சண்முகரெத்தினம் குருக்களினால் இடம்பெற்றது.