சுவிசில் எழில் பூக்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா

0
1205

அவுஸ்திரேலியா வாழ் கவிஞர் த. நந்திவர்மனின் “எழில் பூக்கள்” கவிதை நூலின் அறிமுக விழா மார்ச் 31 ஆம் திகதி சூரிச் – ஹின்வில் நகரில் அமைந்தள்ள ஸ்ரீ விஸ்ணு துர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் விமரிசையாக நடைபெற்றது.

https://www.youtube.com/watch?v=FkmeCTz6cDs

ஆன்மீகப் பேச்சாளர் ஆ. செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காரை அபிவிருத்திச் சங்க முன்னாள் தலைவர் ந. சரவணப்பெருமாள் வரவேற்புரை நிகழ்த்தினார். ஸ்ரீலஸ்ரீ தவத்திரு கைலைமாமணி சரஹணபவாநந்தக் குருக்கள், சிவஸ்ரீ இராம சிவசண்முகநாதக் குருக்கள் ஆகியோர் ஆசியுரை நிகழ்த்தினர்.
நூல் ஆய்வுரையை அட்லிஸ்வில் முருகானந்தா தமிழ்ப் பாடசாலை அதிபர் லோகநாதன் வாகீசன் நிகழ்த்தினார்.
ஊடகவியலாளர் சண் தவராஜா, எழுத்தாளர் கல்லாறு சதீஷ், பேர்ண் மேல்மருவத்தூர் வாரவழிபாட்டு மன்ற தலைவர் சுரேஷ், சூரிச் சரஸ்வதி வித்தியாலய அதிபர் தாரணி சிவசண்முகநாதசர்மா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
நடனம், பாடல் போன்ற நிகழ்வுகளுடன் கவிஞர் நந்திவர்மன் எழுதிய கவிதைகளை சிறார்கள் மேடையில் தோன்றி பாடியமை குறிப்பிடத்தக்கது.