சுவிசில் எச்சங்கள் நூல் வெளியீட்டு விழா

0
1947

எழுத்தாளர் வாணமதி எழுதிய எச்சங்கள் என்ற தலைப்பிலான சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா ஏப்ரல் முதலாம் திகதி ஞாயிற்றுக் கிழமை சூரிச் மாநகரில் சிறப்பாக நடைபெற்றது.

சங்கீத ஆசிரியை கயல்விழி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்களான கனகரவி, சண் தவராஜா மற்றும் ஊடறு பெண்கள் அமைப்பின் தலைவி ரஞ்சி, சுவிஸ் தமிழ்க் கல்விச் சேவையின் முன்னைநாள் இணைப்பாளர் மகேந்திரராஜா நாடக நடிகர் நாடக இயக்குநர் பாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
சிறப்பு நிகழ்வுகளாக சிறார்களின் நடனம், பாடல் போன்றவையும் இடம்பெற்றன.