பல்­க­லைக்­க­ழ­க ­கல்­வி­சாரா ஊழி­யர்களின் வேலை நிறுத்தம் உண்ணாவிரதமாகிறது.

0
1081

தொடர்ச்­சி­யான பணிப் பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்டு வரும் அனைத்து பல்­க­லைக்­க­ழ­க ­கல்­வி­சாரா ஊழி­யர்கள் கடந்த பெப்­ர­வரி மாதம் 28ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்­சி­யான பணி பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்டு வருகின்ற நிலையில் நாளை திங்கட்கிழமை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஜனநாயகப் போராட்டங்கள், கவன ஈர்ப்புப் பேராட்டங்களை நடத்தி நியாயமான தீர்வுத்திட்டம் கிடைக்காத காரணத்தினால் திங்கட்கிழமை முதல் உணவு தவிர்ப்பு போhட்டத்தினை நடத்தத் தீர்மானித்துள்ளோம் என்று கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் ராஜநாதன் ராஜசேகரன் தெரிவித்தார்.
போதனை சாரா பல்கலைக்கழக ஊழியர்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு இதுவரை முடிவுகள் கிடைக்காத நிலையில் தங்களது போராட்டம் உணவு தவிர்ப்புப் போராட்டமாக மாற்றம் பெறுவதாக அவர் தெரிவித்தார்.
அனைத்து பல்கலைக்கழக தொழில் சங்க சம்மேளனம், அதனுடன் இணைந்திருக்கின்ற தொழில் சங்கங்களின் கூட்டுக் குழுவின் அனுசரணையில் கடந்த 30 நாட்களாக தொழில்சங்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அமைச்சுக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் நடத்தப்பட்ட பேச்சுக்களில் எந்தவிதமான தீர்வும் கிடைக்காததனால், கவனஈர்ப்புப் பேராட்டங்களை நடத்தி நியாயமான தீர்வுத்திட்டம் கிடைக்காத காரணத்தினால் திங்கட்கிழமை முதல் உணவு தவிர்ப்பு போhட்டத்தினை நடத்தத் தீர்மானித்துள்ளோம்.
இந்த அடிப்படையில் எமது சம்மேளன உறுப்பினர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை முதல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக திங்கட்கிழமை முதல் அனைத்து பல்கலைக்கழகங்களின் முன்னாலும் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அனைத்துப் பல்­க­லைக்­க­ழக தொழிற்­சங்க சம்­மே­ளன ஏற்­பாட்­டில்­ அ­னைத்துப் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலும், பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­குழுவின் ஊழி­யர்கள் உள்­ளிட்ட உயர்­கல்வி நிறு­வ­னங்­களில் பணிபு­ரியும் அனைத்து ஊழி­யர்­களும் ஒன்­றி­ணைந்து தொடர்ச்­சி­யான வேலை­நி­றுத்தப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.
மொழித்­தேர்ச்சிக் கொடுப்­ப­னவு, காப்­பு­றுதி சேவைகள், சொத்­துக்­க­ளுக்­கான கடன் எல்­லையை அகற்­றுதல், உரிய ஓய்­வூதிய முறையை உரு­வாக்­குதல், பதவி உயர்­வு­க­ளுக்­கான வரை­ய­றை­களை நீக்­குதல், சம்­பள உயர்­வு­களில் காணப்­படும் வேறு­பா­டு­களை நீக்­குதல், ஆட்­சேர்ப்பு நடை­மு­றைகள் என்­ப­வற்­றிற்குத் தீர்­வுகள் வழங்­கப்­ப­ட­வேண்டும். இக் கோரிக்­கை­க­ளுக்கு இதுவரையில் சரி­யான தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை எனவும் அதனை நிறை­வேற்­று­மாறு கோரி­யுமே தொடர்ச்­சி­யான வேலைநிறுத்­தத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.
அனைத்துப் பல்­க­லைக்­க­ழ­கங்கள் மற்றும் உயர்­கல்வி நிறு­வ­னங்­களை பிர­தி­நி­தித்துவப்­ப­டுத்தும் 24 தொழிற்­சங்­கங்கள் ஒன்­றி­ணைந்து தொடர்ச்­சி­யா­ன ­வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை கல்வி சாரா ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களினதும் செயற்பாடுகள் யாவும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் அடங்கிய முழுப் பல்கலைக்கழகங்களுமே வெறிச்சோடிக் காணப்படுவதை அவதானிக்கவும் முடிகிறது.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்வி சாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க கோரியும், சம்பள ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட சம்பள உயர்வுகளை நடைமுறைப்படுத்தக் கோரியும் கடந்த 2016ஆம் ஆண்டில் தொடங்கி வைக்கப்பட்ட போராட்டமே இப்பொது தொடர்ச்சியான போராட்டமாக வடிவெடுத்துள்ளது.
2016ஆம் வருடம் பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி, உயர் கல்வி அமைச்சின் செயலாளருக்கும் பல்கலைக்கழக தொழிற்சங்கக் கூட்டுக் குழுவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட கூட்டு உடன்படிக்கையை அமுல்படுத்தத் தவறியதைக் கண்டித்தும் 25 வீத சம்பள உயர்வை வழங்கும் படியும் தொழிற்சங்கப் போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.