மட்டக்களப்பில் ஐக்கிய தேசியக் கட்சிகட்சிக்குள் பிளவா? இருஅணிகளாக சத்தியப்பிரமாணம்.

0
953

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் தெரிவான உறுப்பினர்கள் இரு பிரிவுகளாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்கள் அமைச்சர் சுவாமிநாதன் முன்னிலையிலும்  வேறுசிலஅங்கத்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரான எஸ் .கணேசமூர்த்தியின் ஏற்பாட்டிலும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இவ்நிகழ்வுகள் மட்டக்களப்பில் ஐக்கிய தேசியக் கட்சி இருஅணிகளாக செயற்படுகின்றதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் தெரிவான உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிகழ்வு நேற்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள்  அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கார்த்திக் சசிதரன், கல்குடா அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன், மாகாண சபையின் முன்ளாள் உறுப்பினர் அலோசியஸ் மாசிலாமணி, மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மகேஸ்வரன்  மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தொகுதி பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பு கோப் இன் விடுதியில் நடைபெற்றது .

மட்டக்களப்பு மாவட்ட  ஐக்கிய தேசியகட்சியின்  இணைப்பாளர் எம் ஜெகவண்ணன் ஒழுங்கமைப்பில் முன்னாள் பிரதி அமைச்சரும் , ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான எஸ் .கணேசமூர்த்தி தலைமையில் சட்டத்தரணி அ. மகாலிங்கம் சிவம்    முன்னிலையில் உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு நடைபெற்றது