மட்டக்களப்பில் சரியான நேரத்தை காட்டாத மணிக்கூடு கோபுரங்கள்

0
904

க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மாநகரசபை சபையின் பரிபாலனத்தின் கண்காணிப்பில் காணப்படும் அரசடி மணிக்கூடு கோபுரத்தில் உள்ள கடிகாரம் சுமார் ஒருமாதமாக செயலிழந்து காணப்படுகின்றது என பாதசாரிகள்,பயணிகள்,பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.”நேரம் பொன்னானது”,நேரத்துக்கு கடமைக்குச் சென்றால் சிறப்பானதாக அமைந்துவிடும் என பெரியோர்கள் சொல்வதை கண்டிருக்கின்றோம்.
மட்டக்களப்பு நகரில் காணப்படும் மணிக்கூடு கோபுரத்தில் உள்ள கடிகாரத்தை பார்த்து தங்களின் நேரம் முகாமைத்துவதற்கு விரைந்து செயற்படும் பொதுமக்களும்,அரச ஊழியர்களும்,மாணவர்களுக்கும் இருக்கும்வரை மணிக்கூடு கோபுரத்தின் உள்ள கடிகாரம் செயலிழப்பு காரணமாக பலர் அசௌரியங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பலர் விசனம் தெரிவிக்கின்றார்கள்.பொதுமக்களிடம் இருந்து பல்வேறு வடிவங்களிலில் காலதாமதம் இன்றி வரிப்பணங்களை அறவிடும் மட்டக்களப்பு மாநகரசபை பொதுமக்களின் பயன்பாட்டுத்தேவைக்கு ஏன் மணிக்கூடு கோபுரத்திற்குள் இருக்கும் செயலிழந்த கடிகாரத்தை திருத்த முடியாமல் இருக்கின்றார்கள் ..? என பொதுமக்கள் ஏப்பம் விடுகின்றார்கள்.இந்த மணிக்கூடு கோபுரத்தில் மட்டுமல்ல ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழங்குடா,கிரான்குளம் மற்றும் இருதயபுரங்களிலும் இருக்கும் கோபுரங்களில் இருக்கும் கடிகாரங்களும் வருடக்கணக்கில் செயலிழந்துதான் காணப்படுகின்றது.அரச அதிகாரிகள் தூங்கியிருக்காமல் விழித்துக்கொள்ள வேண்டிய தேவையுடன் பொதுப்பயன்பாட்டையும் சீர்செய்ய வேண்டுமேன பொதுமக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.