கொக்கட்டிச்சோலை  பகுதியிலும் கையெழுத்து போராட்டம் 

0
792

(படுவான் பாலகன்) ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனுக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கோரி கையெழுத்து போராட்டம் இன்று(27) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் இடம்பெற்றது.

குறித்த, கையெழுத்துப் பெறும் வேட்டையில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஆனந்தசுதாகரனின் மனைவியினது மரணக்கிரியைகள் அண்மையில் இடம்பெற்ற போது, அவனது குழந்தை ஆனந்தசுதாகரனுடன் செல்வதற்காக சிறைச்சாலை பேரூந்தில் ஏறிய சம்பவம் எல்லோர் மனதையும் நெகிழவைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து அவனது குழந்தைகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு பொதுமன்னிப்பு வழங்கும் கோரிக்கையை முன்வைத்து கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பும் செயற்பாடுகள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.