எரிபொருள் விலை நிவாரணம் மக்களுக்கு வழங்கப்படும்

0
620
மக்களுக்கான எரிபொருள் விலை நிவாரணங்களைத் தொடர்ந்து வழங்கப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விலையேற்றத்திற்கு அனுமதிக்கவில்லை என அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் சுதர்ஷன குணவர்த்தன தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை நிவாரணத்தைத் தொடர்ந்தும் வழங்குதல் என்பது மக்களுக்கான உறுதிமொழியை நிறைவேற்றுவதாகும் என அவர் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 95-ஒக்டேன் பெற்றோல் லீற்றரை 128 ரூபாவிற்கு விற்பனை செய்கிறது. இதன் மூலம் லீற்றருக்கு ஏற்படும் இழப்பு 9 ரூபாவைத் தாண்டுகிறது. அதேபோன்று ஒக்டேன் 92 வகை பெற்றோல் 117 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதன் மூலம் லீற்றருக்கு சுமார் 15 ரூபா வரையிலான நஷ்டம் ஏற்படுகிறது. மண்ணெண்ணெயை 88 ரூபாவைத் தாண்டிய விலையில் விற்பனை செய்ய வேண்டும். ஆனால்இ பெற்றோலிய கூட்டுத்தாபனம் 44 ரூபாவிற்கு விற்பனை செய்கின்றது.
மக்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் நிவாரணத்தைத் தவறான முறையில் பயன்படுத்தும் சம்பவங்கள் பற்றி தகவல் வெளியாகிறது. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.