கிரான்குளத்தில் வேல்நாதம் இறுவெட்டு

0
540
(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு கிரான்குளத்தில் வீற்றிருந்து அருட்கடாச்சாம் வழங்கிக்கொண்டிருக்கும் திருமுருகன் ஆலயம் மீது புகழ்பாடப்பெற்ற “வேல்நாதம்” இறுவட்டு வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை(25.3.2018) திருமுருகன் ஆலையத்தலைவர் அ.தங்கவேல் தலைமையில் ஆலய முன்றலில் நடைபெற்றது.

ஊர்க்கவிஞன் ஜீ.எழில்வண்ணன் அவர்களால் எழுதப்பட்டு ,பிரசித்த நொத்தாரிசும் சமாதான நீதவானுமாகிய பெ.சிவசுந்தரம் அவர்களால் தயாரிக்கப்பட்ட வேல்நாதம் இறுவட்டை திருமுருகன் ஆலய திருப்பணிச்சபையால் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சிதம்பரப்பிள்ளை-அமலநாதன் அவர்களும்,சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் உதவிச்செயலாளர் உ.சிவராசா,போரதீவுப்பற்று பிரதேச செயலத்தின் உதவிப்பிரதேச செயலாளர் சி.புவனேந்திரன்,கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர் ச.தட்சணாமூர்த்தி,ஆரையம்பதி பிரதேச சபைச்செயலாளர் ந.கிருஸ்ணப்பிள்ளை உட்பட கிராமசேவையாளர்கள்,ஆலயத்தலைவர்கள்,ஊடகவியலாளர்கள்,பக்த அடியார்கள்,ஆலய நிருவாகத்தினர்கள் கலந்துகொண்டார்கள்.

இதன்போது வேல்நாதம் இறுவெட்டை ஆலத்தில் நடைபெற்ற பூசை வழிபாட்டில் வைத்து முருகனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது.இந்நிகழ்வில் பூசை வழிபாடு,மங்கல விளக்கேற்றல்,ஆசியுரை,தலைமையுரை,அறிமுகவுரை,வெளியீட்டு உரை,ஆன்மீக உரை,இறுவட்டு வெளியீடு,கௌரவிப்பு நிகழ்வு,நயவுரை,அதிதிகள் உரை,ஏற்புரை என்பன இடம்பெற்றுள்ளது.

இறுவெட்டு நிகழ்வின் நயவுரையினை கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் க.மோகனதாஸ் அவர்கள் இசையோடு வேல்நாதம் கலந்து உரையாற்றிது எல்லோரையும் மெச்சத்தக்க செய்து இசையால் ஈர்க்கப்பட்டமை விஷேடமாக குறிப்பிடலாம்.பாடலாசிரியரும்,ஊர்க்கவிஞனுமாகிய ஜீ.எழில்வண்ணனும்,தயாரிப்பாளரும் நொத்தாரிசுமாகிய பெ.சிவசுந்தரம் ஆகியோர்களுக்கு ஊர்மக்களாலும்,அதிதிகளினாலும் பொன்னாடை போர்த்தப்பட்டு ,ஞாபகார்த்த சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.