திருகோணமலையின் அடையாளசின்னங்களான மான்களை அழியவிடாது பாதுகாப்பதற்கான முதல்கட்ட நடவடிக்கை

0
830

இன்று(22.03.2018)மாலை 4.00 மணிக்கு சங்கமித்தை யாத்திரை விடுதியில் திருகோணமலையின் அடையாளசின்னங்களான மான்களை அழியவிடாது பாதுகாப்பதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக அரசாங்க அதிபரினாலும்,வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளரினாலும் திருமலை நகர்ப்பகுதியில் வாழும் மான்களின் கணக்கெடுப்பு நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.கணக்கெடுப்பிற்கான கோவைகளை பெறுவதையும்,அதற்கான விளக்கத்தை அரசஅதிபர் வழங்குவதனையும்,இரானுவ வீரர்கள்,பொலிஸார்,சிவில் பாதுகாப்பு படையினர் ,கிராமசேவையாளர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,திருமலை பிரஜைகள் குழு அங்கத்தவர்கள் என சுமார் 250 பேர்வரை இக்கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவதனையும் காணலாம்