திருமலையில் கௌரவிக்கப்பட்ட பெண்கள்.

0
916

திருக்கோணமலை “கண்ணப்பநாயனார் அறக்கட்டளை” முதியோர் மற்றும் முற்காலத்தில் மது ஒழிப்பு மற்றும் சமூக சேவைக்காக அற்பணித்த பெண்கள், மற்றும் சமூகத்திற்காக அற்பணித்து செயற்பட்டு வரும் ஆண்கள் நகரின் கரையோரக்கிராமங்களில் பல்கலைக்கழகம் சென்று சாதனைப்படைத்த இளைஞர் யுவதிகள் மற்றும் திருக்கடலூர் நாமகள் வித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் போன்றோரை பாராட்டி கௌரவித்தது.
கண்ணப்நாயனார் அறக்கட்டளையின் தலைவர் வி.எஸ்.ராஜா தலமையில் நாமகள் வித்தியாலய மண்டபத்தில் நடந்த இந்நிகழ்வில் சமூகசேவையில் செயற்பட்ட அதிகளவிலான பெண்கள் பொதுச்சேவைக்காக கௌரவித்தது இதுவே முதல்தடவையாகும்.
கண்ணப்பநாயனார் கடவுள்மீதான அதீத பக்தியையும் அன்பையும் வெளிப்படுத்தி தனது உறுப்புக்களையும் அதற்காக இழக்க முன்வந்த ஒருவர். அவர் வழியில் இந்த அறக்கட்டளையும் கண்தானம், இரத்ததானம் போன்ற அற்பணிப்புக்களை செய்ய தன்னை அற்பணித்துள்ளதாக கட்டளையின் தலைவர் ராஜா இங்கு குறிப்பிட்டார்.
அதனடிப்படையில் திருக்கடலூரின் முதல்பௌதீகவியல் பல்கலைக்களக மாணவரானதற்போதைய பௌதீகவியல் ஆசிரியர் .எஸ்.ஜெயகாந்தன் கௌரவிக்கப்பட்ட பின்னர் உரையாற்றுவதனையும் சமூகத்திற்காக அற்பணித்து சேவையிலீடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கௌரவிக்கப்பட்டிருப்பதனையும்,
; கௌரவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றாக நிற்பதனையும் திருக்கோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய ஆதீன கர்த்தா மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைப்பதனையும்அவரும் கௌரவிக்கப்பட்டிருப்பதனையும் படங்களில் காண்க
இந்நிகழ்வு மிகவும் சிறப்பு மிக்கதும் எடுத்துக்காட்டானதுமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.